விழுப்புரம்; மேல்மலையனூர் கோவிலில், இன்று அமாவாசையை முன்னிட்டு அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு இன்று காலை அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க காப்பு அலங்காரம் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அங்காளம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு 11.10 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருள்வார். அங்கு சிறப்பு பூஜையுடன் உற்சவம் துவங்கி, ஊஞ்சல் தாலாட்டு நடைபெறும். இதில் கோவில் பூசாரிகளும், பக்தர்களும் தாலாட்டு பாடல்களை பாடி அம்மனை வழிபடுவர்.