தருமபுரம் ஆதீனத்திடம் ஆசி பெற்ற வேளாண்துறை அமைச்சர்



மயிலாடுதுறை; மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை இன்று மதியம் தமிழக வேளாண்துறை அமைச்சர் வினோத் சந்தித்து ஆசி பெற்று, குருமகா சன்னிதானத்துடன் கலந்துரையாடினார். தருமபுரம் ஆதீனம் பேசுகையில் தவெக. ஆட்சியில் கும்பகோணம் மகாமகம் விழா வருகிறது. வடநாடுகள் மாதிரி மகாமகம் விழாவை செம்மையாக கொண்டாட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயம் சார்ந்த பகுதியான மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண் கல்லூரி அமைப்பதற்கு முன்னாள் அமைச்சர்களிடம் கோரிக்கை வைத்தோம். மத்திய அரசின் திட்டத்தில் வேளாண் கல்லூரி தொடங்க விண்ணப்பம் செய்துள்ளோம். தமிழக அரசு வேளாண் கல்லூரி அமைப்பதற்கு அனுமதி அளித்தால் அதற்கு இடங்களை வழங்குவதற்கு தயாராக உள்ளோம். நெல் சேமிப்பு கிடங்குகள் அமைப்பதற்கு ஆதின கோவில் இடங்களை வழங்கியுள்ளோம். அண்டை மாநிலங்களில் இருந்து தானியம் வாங்குவதை கைவிட்டு நமது மாநில உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும். முப்போகம் விளைய பூமி தாய் தயாராக இருக்கிறது. மக்கள் உழைத்து உற்பத்தி செய்ய வேண்டும். விவசாயிகளின் உழைப்பை வீணாக்காமல் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்றார்.

பின்னர் அமைச்சர் வினோத் செய்தியாளர்களை சந்தித்தபோது மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண் கல்லூரி அமைப்பதற்கான வாய்ப்புகள் இருந்தால் முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றிக் கொடுப்போம். கடந்த ஆட்சி காலத்தில் அண்டை மாநிலங்களில் உணவு தானியங்கள் கொள்முதல் செய்துள்ளனர். அதனை படிப்படியாக குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார். உரம் விலையை குறைப்பதற்கு மத்திய அரசை தமிழக முதல்வர் வலியுறுத்துவார் என்றார். நிகழ்ச்சியில் தவெக. மாவட்ட செயலாளர்கள் கோபிநாதன் மற்றும் ஆதீன நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்