திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அமாவாசை மஹா அபிஷேகம்



திருவண்ணாமலை; வைகாசி அமாவாசை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், (உற்சவமூர்த்தி) உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாருக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகம் செய்தனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், ஆண்டு தோறும் வைகாசி அமாவாசையை முன்னிட்டு, அண்ணாமலையார் உற்சவ மூர்த்திக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடக்கும். இதேபோன்று இந்த ஆண்டும், வைகாசி அமாவாசையை முன்னிட்டு, 1008 லிட்டர் பால், 100 கிலோ சந்தனம், 100 லிட்டர் தேன், தயிர், கரும்பு சாறு, இளநீர், சந்தனம், 100 கிலோ விபூதி என, 108 மூலிகை பொடிகள் ஆகியவற்றால், காலை, 6 மணி முதல், மதியம், 12மணி வரை சிறப்பு அபிஷேகம் நடந்தது. உண்ணாமுலையம்மன் சமேதராய் அண்ணாமலையாருக்கு  நடந்த சிறப்பு தீபாதனையில் ஏராளமான பக்தர்கள் வழிப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்