ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜருக்கு திருவாதிரை திருமஞ்சனம்



ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், ஆனி மாத திருவாதிரையையொட்டி, ராமானுஜருக்கு விசேஷ திருமஞ்சனம் மற்றும் வீதியுலா புறப்பாடு நேற்று நடந்தது.

ஸ்ரீபெரும்புதுாரில், ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆனி மாத திருவாதிரை திருநட்சத்திரத்தையொட்டி, நேற்று காலை 5:00 மணிக்கு விஸ்வரூபம், அங்கபிரதேசனம், திருவாராதனம் தீர்த்தம் உள்ளிட்டவை நடந்தன.

காலை 11:30 மணிக்கு, ராமானுஜருக்கு திருமஞ்சனம் எனும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனை நடந்தது. தொடர்ந்து, மாலை 5:15 மணிக்கு குளக்கரை வீதியுலா புறப்பாடு சென்று, ராமானுஜர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இரவு 7:00 மணிக்கு திருவாராதனம் சேவை, சாற்றுமுறை தீர்த்தம், மண்டகப்படி உள்ளிட்டவை நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்