பிறந்தது ஆடி.. அம்மன் புகழ் பாடி வணங்குவோம். அருள் பெறுவோம்..!



ஆடி அம்மனுக்கு உரிய மாதமாகப் போற்றப்படுகிறது. முதல் நாளே ஆடி வெள்ளி வருவது சிறப்பானதாகும்.  சூரியன் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குள் நுழையும் தட்சிணாயன புண்ணிய காலம் துவங்கியது. இது தேவர்களின் இரவுப் பொழுதாகும். இன்று வாசலில் கோலமிட்டு, அம்மனுக்குத் தேங்காய் பால், பாயசம், வடை மற்றும் ஆடி கூழ் காய்ச்சி வழிபாடு செய்வது சிறப்பு.


தமிழ் மாதங்களில் உள்ள 12 மாதங்களில், ஒவ்வொரு மாதமும், பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. தட்சிணாயணத்தின் துவக்கமாகிய ஆடி மாதம், பல்வேறு விழாக்களை கொண்டாடும் புனித மாதம் என்று, ஹிந்து மக்கள் கொண்டாடுகின்றனர். ஆடிவெள்ளிக்கிழமை, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், நாக, கருட பஞ்சமி, ஆடிப்பெருக்கு, ஆடித்தபசு, ஆடிமாத உபகர்மா, வளையல் அலங்காரபூஜை, சுமங்கலிகளின் விளக்கு பூஜை, ஆடி மாத செவ்வாய் வழிபாடு, கிராமதேவைகளுக்கு பத்து நாட்கள் உற்சவம், ராகிக்கூழ், ஆடிப்பட்டம் தேடி விதைப்பது, தட்சிணாயண புனித காலம் துவக்கம், குலதெய்வ வழிபாடு, கஜேந்திர மோட்சம் நடந்த மாதம், ஆண்டாள் அவதாரம் என, பல்வேறு சிறப்புகளை பெற்றது ஆடிமாதம். தமிழ்மாதங்களில், அதிகப்படியான வழிபாட்டு விழாக்களை கொண்ட ஆடி மாத பிறப்பன்றே ஆடி வெள்ளி வருவது சிறப்பானதாகும். ஆடி மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளும் விசேஷமானதாகும். மாவிளக்கு ஏற்றி வழிபடுவதால், ஆரோக்கியம் சீராகும். இன்று அம்மனை வழிபட குடும்பத்தில் செல்வத்தையும், கணவருக்கு நீண்ட ஆயுளையும் பெறலாம்!


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்