செஞ்சி: மேல்மலையனூர், மேலச்சேரி அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு குலதெய்வ வழிபாடு செய்தனர்.
தமிழகத்தில் ஆடி வெள்ளிகிழமைகளில் குல தெய்வத்திற்கு பொங்கல் வைத்து, புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு மொட்டை அடித்து காதுகுத்துவது வழக்கம். இந்த ஆண்டு வெள்ளிகிழமையில் ஆடி முதல் நாள் பிறந்துள்ளது. இதனால் அம்மன் கோவில்களில் இன்று சிறப்பு அபிஷேகம், சிறப்பு வழிபாடு நடந்தது. பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில், செஞ்சி அடுத்த மேலச்சேரியில் காட்டின் நடுவில் உள்ள பச்சையம்மன் கோவில்களில் நேற்று குல தெய்வ வழிபாடு நடத்த ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் பொங்கல் வைத்தும், குழந்தைகளுக்கு மொட்டையடித்தும் குல தெய்வ வழிபாடு நடத்தினர்.