ஆடி வெள்ளி, மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்



திருப்புவனம்: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் ஒன்றான மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசிக்க குவிந்தனர்.


ஆடி மாதங்களில் அம்மன் கோயில்களில் பூஜைகள் களை கட்டும், இன்று ஆடி முதல் வெள்ளி என்பதால் பக்தர்கள் காலை முதலே அம்மனை தரிசிக்க வருகை தந்தனர். அம்மனுக்கு எலுமிச்சை மாலை, பட்டுச்சேலை அணிவித்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். மதியம் ஒரு மணிக்கு உச்சி கால பூஜை தொடங்கியது. விநாயகர், அய்யனார் மற்றும் பரிவார தேவதைகளுக்கு பூஜைகள் செய்த பின் அம்மனுக்கு ஏழு வகையான தீபாராதனை காட்டப்பட்டது. உச்சி கால பூஜையை காண குவிந்திருந்த பக்தர்கள் தீபாராதனை காட்டிய பின் அம்மனை நோக்கி சாமியாடினர்.  பக்தர்களுக்கு எலுமிச்சம்பழம் பிரசாதமாக வழங்கப்பட்டது. பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய சவுக்கு கட்டைகள் வைத்து தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. முதியோர்கள், குழந்தைகளுடன் வரும் பக்தர்கள் தரிசனம் செய்ய தனி வரிசை ஏற்படுத்தப்பட்டிருந்தது. கோயில் வளாகத்தின் நான்கு திசைகளிலும் பக்தர்கள் தாகம் தணிக்க மினரல் வாட்டர் கேன் வைக்கப்பட்டிருந்தது. போலீசார் கோயில் வாசலை ஒருவழிப்பாதையாக மாற்றி இருந்தது வரவேற்பை பெற்றது. அரசு பஸ்கள் தவிர மற்ற வாகனங்கள் அனைத்தும் வாகன பார்க்கிங் பகுதியை சுற்றி செல்லுமாறு மாற்றியிருந்ததால் தரிசனம் முடிந்த பக்தர்கள் விரைவாக வெளியேற வசதியாக இருந்தது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்