ஆடி வெள்ளி; திருப்பூர் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு



திருப்பூர்: இன்று ஆடி மாதப் பிறப்பு மற்றும் முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.


தமிழ் மாதங்களில் ஆடி மாதத்துக்கு தனிச் சிறப்பு உண்டு. ஆன்மிக வழிபாட்டில் ஆடி மாதம் அம்மன் தெய்வங்களுக்கு சிறப்பான மாதமாக கொண்டாடப்படுகிறது. பவுர்ணமி, அமாவாசை, ஆடிப்பூரம், ஆடித்தபசு, ஆடிப் பெருக்கு ஆகிய பண்டிகைகளும் இம்மாதத்தின் சிறப்பாக அமைந்துள்ளன. மேலும், அனைத்து வெள்ளிக்கிழமைகளும் கூடுதல் சிறப்பாக அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும்.


நடப்பாண்டு ஆடி மாதம் இன்று முதல் வெள்ளிக்கிழமையுடன் துவங்குகிறது. தொடர்ச்சியாக ஐந்து வெள்ளிக்கிழமைகளும் வருவதால் கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு திருப்பூர் பகுதியில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் இன்று சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதே போல் இம்மாதத்தின் சிறப்பாக கூழ் வழங்கும் நிகழ்வு, ஒரு சில கோவில்களில் அன்னதானமும் வழங்கப்படவுள்ளது. 


திருப்பூரில் உள்ள கோட்டை மாரியம்மன், செல்லாண்டியம்மன், பேச்சியம்மன், மாகாளியம்மன், மாரியம்மன், பட்டத்தரசியம்மன், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன், காமாட்சியம்மன், பத்ரகாளியம்மன் உள்ளிட்ட அனைத்து அம்மன் கோவில்களிலும் இன்று ஆடி முதல் ெவள்ளியை முன்னிட்டு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது. மேலும் பல்வேறு கோவில்களில் மூலவருடன் எழுந்தருளி அருள் பாலிக்கும் அம்மன் சன்னதிகளிலும் ஆடி வெள்ளி முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடக்கிறது. 


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்