ஆடி மாத பிறப்பு, ஆடி வெள்ளி; கோவை அம்மன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்



கோவை; ஆடி மாத பிறப்பு மற்றும் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோவை ரேஸ் கோர்ஸ் சாரதாம்பாள் கோவிலில் மூலவர் சாரதாம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர்.


தமிழ் மாதத்தின் நான்காவது மாதமான ஆடி மாதம் 2026 ஆண்டு வெள்ளிகிழமை அன்று பிறக்கிறது ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது இந்த நாள் ஆன்மீக வழிபாட்டிற்கும் விவசாய பெருமக்களுக்கும் உகந்ததாக கருதப்படுகிறது ஆடி மாத பிறப்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெறும் இந்த மாதத்தில்  வீட்டில் உள்ள அம்மன் படத்திற்கு முன்பு  விளக்கேற்றி சக்கரை பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கமான ஒன்றாக உள்ளது அதேபோன்று அம்மன் கோயில்களில் கூழ் காய்ச்சி பொதுமக்களுக்கு கொடுக்கும் நிகழ்வு நடைபெறும்  இந்த மாதத்தில் வரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு பூஜை அபிஷேகங்கள் நடைபெறும் இதையொட்டி கோவையில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது கோவை ஆர் எஸ் புரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் அன்னபூர்ணேஸ்வரி கோவில் ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவில் தண்டு மாரியம்மன் கோயில் கோணியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது இந்த நிகழ்வுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர் அனைத்து கோயில்களிலும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம்  வழங்கப்பட்டது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்