திருவாரூர்: திருவாரூர் ஸ்ரீ வாராஹி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் ஆஷாட நவராத்திரி விழாவில் கனி அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார்.
வாராஹி பீடம் மங்கள துர்கை அம்மன் ஆலையத்தில் ஆஷாடா நவராத்திரி திருவிழா 9நாட்கள் நடைபெறுகிறது. கடந்த 14ம் தேதி கொடி யொற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து வராகி அம்மன் தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இன்று மூன்றாம் நாள் கனி அலங்காரத்தில் பக்தர்களுக்கு வாராஹி அம்மன் காட்சியளித்தார். பழங்களால் மாலை அணிவித்து வாராகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வாராஹி அம்மனை வழிபட்டனர்