ஆடி வெள்ளி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்



காரைக்குடி: காரைக்குடி பகுதியில், ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படும் ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஆடி வெள்ளியன்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதோடு, கூழ் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்துவர். காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில், ஆடி முதல் வெள்ளியன்று அம்மனுக்கு பச்சை மஞ்சள் அரைத்து அபிஷேகம் செய்யப்படும். இதற்காக 350 கிலோ பச்சை மஞ்சள் அரைக்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று மதியம் அம்மனுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்யப்பட்டது. ஜூலை 21 பால்குட நிகழ்ச்சியும், ஜூலை 24 திருவிளக்கு பூஜையும், ஜூலை 31 கணபதி ஹோமம் மற்றும் 1008 சங்காபிஷேகமும், ஆக.14 கோமாதா பூஜையும் வளையல் அலங்காரமும் நடைபெறுகிறது. ஆடி வெள்ளியான நேற்று ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்