நத்தம் மாரியம்மன் கோவிலில் ஆடி வழிபாடு; பக்தர்கள் தரிசனம்



நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவிலில் ஆடி மாத பிறப்பு மற்றும் முதல் வெள்ளிகிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி மாரியம்மனுக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டு 16 வகையான சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது.தொடர்ந்து கோவில் முன்பாக கூழ் ஊற்றப்பட்டது. இதில் சுற்று வட்டாரங்களிலிருந்தும், வெளிமாவட்டங்களிலிருந்தும், ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றி அம்மனை தரிசனம் செய்தனர். இதைப்போலவே குட்டூர் உண்ணாமுலை அம்மன், பகவதி அம்மன், காளியம்மன், மதுர காளியம்மன், ராக்காயி அம்மன், தில்லை காளியம்மன், வாராஹி அம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் ஆடி மாத பிறப்பு மற்றும் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்