சிதம்பரம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் : தீமிதி திருவிழா



 சிதம்பரம்: சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன் கோயில் ஆடி மாத உற்சவம் கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று தேர்திருவிழா நடந்தது. தேரில் உற்சவர் மாரியம்மன் எழுந்தருளி, தேர் கீழசந்நிதி நிலையிலிருந்து புறப்பட்டு நான்கு வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது.

முன்னதாக, நடராஜர் கோயிலிருந்து கோயில் செயலர் ஜெயசூர்யா தீட்சிதர் தலைமையில், பொதுதீட்சிதர்கள் பிரசாதத்துடன் வந்து மாரியம்மனுக்கு பட்டு சாத்தி, மகா தீபாராதனை செய்த பின்னர் தேரோட்டம் துவங்கியது. மாலை உற்சவர் மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். அதனை தொடர்ந்து முக்கிய விழாவான தீமிதி உற்சவம் இன்று நடைபெற உள்ளது. தற்காலிக பஸ் நிறுத்தம் இதையொட்டி, சிதம்பரம் பஸ் ஸ்டாண்ட்டிற்கு வரும் பஸ்கள், தெற்குவீதி, கீழவீதி சந்திப்பில் தற்காலிக பஸ் நிறுத்தமாக செயல்படும் என போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். விழாவையொட்டி, சிதம்பரம் டி.எஸ்.பி., பிரதீப் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சிவானந்தம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நகராட்சி சார்பில், சேர்மன் செந்தில்குமார் உத்தரவின்பேரில், குடிநீர், சுகாதார ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்