கோவை ; ஆடி மாதம் பிரதோஷ தினத்தை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் சிவபெருமானுக்கும் நந்தி பெருமானுக்கும் அபிஷேகம் பூஜை நடந்தது இதில் சர்வ அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்த கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரரும் கோவை மதுக்கரை பகுதி மலை மேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள மூலவரும் சிறப்பு புஷ்ப அலங்காரம் மற்றும் தீப ஒளியில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த நிகழ்வுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமான் மற்றும் சிவபெருமானை வணங்கினர் நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.