பரமக்குடி: பரமக்குடி பாரதிநகர் முத்துமாரியம்மன் கோயில் 22ம் ஆண்டு முளைப்பாரி திருவிழாவில் திருவிளக்கு வழிபாடு நடந்தது. ஜூலை 20 காலை முத்து எடுக்கப்பட்டு மறுநாள் முத்து பரப்புதல் நடந்தது. நேற்று இரவு 7:00 மணிக்கு நடந்த திருவிளக்கு வழிபாட்டில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். இன்று மாலை பாரி வீதி உலா வந்து கோயிலை அடைந்தனர். நாளை வைகை ஆற்றின் கரையில் சக்தி குமரன் செந்தில் ஆண்டவன் கோயில் பாரி வந்தடைந்ததும் வைகை ஆற்றில் கரைக்கும் நிகழ்வு நடக்கிறது. தினமும் கும்மி பாடல் நிகழ்ச்சி நடக்கிறது.