திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மழை வேண்டி வருண ஜெபம்



திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவில் நான்காம் பிரகாரத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும்  சிவாச்சாரியார்கள் வருண ஜெபத்தில் ஈடுபட்டனர்.


வருணனுக்கு ஜலாதிபதி என்ற பெயருண்டு. இவர் மேற்குத் திசைக்கு அதிபதி. மேற்கில் பெய்தால் கிழக்கில் சுபிட்சம் என்று சொல்வது  இதனால் தான். காவிரி உற்பத்தியாகும் திசை மேற்கு. வருணபகவானுக்குரிய வேதமந்திரம்  வருண சூக்தம். இதை வேதியர்கள் ஆறு அல்லது குளங்களில் இடுப்பளவு தண்ணீரில் நின்று கொண்டு நூறுமுறை பாராயணம் செய்தால் மழை பெய்யும் என்று சாஸ்திரம் கூறுகிறது. அதன்படி இன்று உலக நன்மைக்காகவும், மழை வேண்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், நான்காம் பிரகாரத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில், சிவாச்சாரியார்கள் வருண யாகம் செய்தனர். வருண  பூஜை போது பரதநாட்டியம் ஆடி சிறுமிகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்