திருவண்ணாமலை; திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள இடுக்குப் பிள்ளையார் கோவிலில் உடல் பருமனான நபர்கள், முதியோர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
பிள்ளையார் தொந்தியுடன் இருப்பது இயல்பு. ஆனால் இங்கு நந்தியுடன் இருப்பது வித்தியாசம், இங்கு சிறிய குகை போன்ற அமைப்புடன் 3 வாசல் கொண்டது கோயில். அதன் முன்னால் நந்தி, பின்னால் பிள்ளையார் உள்ளனர். கோயிலில் பின் வாசல் வழியாக படுத்தவாறு உள்ளே சென்று பக்தர்கள் வழிபடுவர். இங்கு இரு தினங்களுக்கு முன் உடல் பருமனான ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் இடுக்குப் பிள்ளையாரே தரிசனம் செய்து வெளியே வர முடியாமல் மூச்சுத் திணறி உயிரிழந்த நிலையில், தற்போது கோவில் நிர்வாகம் சார்பில், உடல் பருமனான நபர்கள் மற்றும் முதியோர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.