நோய் தீர வேண்டுமா... செங்கல்பட்டு மாவட்டம் மணப்பாக்கம் கன்னியம்மனை தரிசியுங்கள்.
முன்பு மக்கள் ஆற்றங்கரையோரங்களில் பிடிமண்ணால் செய்த தெய்வங்களை வழிபட்டனர். இது ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை நடக்கும்.
இப்படி இருந்ததே காலப்போக்கில் சிலை வைத்து வழிபாடு செய்யும் முறை வந்தது. இந்த பழமையான வழிபாட்டை கொண்டிருந்த கோயிலே பாலாற்றங்கரை கன்னியம்மன் கோயில்.
ஏழு கன்னி தெய்வங்களும் கருவறையில் காட்சி தருவதால் அம்மனுக்கு இப்பெயர் வந்தது. இந்த கன்னி தெய்வங்களை வழிபட்டால் நோய் தீருவதோடு ஆயுளும் அதிகரிக்கும். திருமணம், வேலை, குழந்தைபேறு போன்ற வேண்டுதலுக்கு தீமிதித்தல், கூழ்வார்த்தல், பொங்கலிடுதல் போன்ற நேர்த்திக்கடனை செய்கின்றனர். மொத்தத்தில் இந்த கன்னியம்மன் இப்பகுதியினருக்கு குலதெய்வமாக திகழ்கிறாள்.
எப்படி செல்வது: திருக்கழுகுன்றத்தில் இருந்து 16 கி.மீ., நேரம்: காலை 9:00 – மாலை 6:00 மணி தொடர்புக்கு: 98943 30580, 89392 72740