திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயிஅம்மன் கோயிலில் இன்று ஆடி 3வது வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு மஞ்சள் பூசும் விழா நடந்தது. இக்கோயிலில் ஆடி 3ம் வெள்ளிக்கிழமையன்று அம்மனுக்கு மஞ்சள்பூசும் விழா நடைபெறும். இன்று காலை 7:00 மணிக்கு கோயில் வளாகம் முழுவதும் பெண்கள் அம்மியால் மஞ்சள் அரைக்கும் பணி நடந்தது. பின்னர் அரைக்கப்பட்ட மஞ்சள் சேகரிக்கப்பட்டு மூலவர் அம்மனுக்கு மஞ்சளால் பூசப்பட்டு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்து மஞ்சள் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவர்,உற்ஸவ அம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடந்தது.திரளாக பெண்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனர். ஏற்பாட்டினை வசந்தப்பெருவிழா குழுவினர் செய்தனர்.