ஆண்டிபட்டி: கொண்டமநாயக்கன்பட்டி ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. இரு நாட்கள் நடந்த நிகழ்ச்சியில் முதல் நாளில் சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடந்தது. ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ ராதை வேடம் அணிந்து வந்த 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. கோயில் வளாகத்தில் பரதநாட்டியம், கோலாட்டம், பஜனை நிகழ்ச்சிகள் நடந்தன. ஸ்ரீ கிருஷ்ணர் பிறப்பு நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டன. 2 ம் நாள் கோயில் வளாகத்தில் நடந்த பஜனை நிகழ்ச்சிக்குப்பின் பெண்கள் முளைப்பாரியுடன் ஸ்ரீ நவநீத கிருஷ்ண சுவாமி ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. நிறைவாக பெண்கள் திருவிளக்கு பூஜை கூட்டு பிரார்த்தனை நடந்தது. விழா ஏற்பாடுகளை நாயுடு சங்க தலைவர் பால்பாண்டி தலைமையில் சமூக தலைவர் கண்ணபிரான், செயலாளர் காமாட்சி, பொருளாளர் காந்தையன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.