கூடலுாரில் கிருஷ்ண ஜெயந்தி விழா; விசேஷ பூஜை



கூடலுார்: கூடலுார் கூடலழகிய பெருமாள் கோயிலில் யாதவ மகா சபை சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.


கோயிலில் எழுந்தருளியுள்ள நவநீதகிருஷ்ணனுக்கு வாசனை திரவியங்களில் அபிஷேகம் நடந்தது. அலங்கார திருமஞ்சனம், விசேஷ பூஜை நடந்தது. பக்தர்கள் கண்ணன் பாடல்கள் பாடினர். துளசி, பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கூடலுார் யாதவ மகா சபையினர் செய்திருந்தனர்.


விஸ்வ ஹிந்து பரிஷத்: கூடலுார் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நகரத் தலைவர் ஜெகன் தலைமையில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. கண்ணன், ராதை வேடமணிந்து வந்த குழந்தைகளுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. 2 ஆயிரம் பேருக்கு மேல் அன்னதானம் வழங்கப்பட்டது. கருப்பசாமி அறக்கட்டளை தலைவர் சக்திவேல், பிரண்ட்ஸ் கேபிள் லோகநாயகி, கிரிதரன், த.வெ.க., மாவட்ட துணை செயலாளர் செல்வேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்