மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ரூ.85.75 லட்சம் காணிக்கை



செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், ரூ.85 லட்சத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர்.


விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் சக்திவேல் முன்னிலையில் நடந்தது. இதில், 85 லட்சத்து 75 ஆயிரத்து 912 ரூபாய் ரொக்கம், 106 கிராம் தங்கம், 755 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். அறங்காவலர் குழுத்தலைவர் சேட்டு, அறங்காவலர்கள் சுரேஷ், மதியழகன், பச்சையப்பன், வடிவேல், சரவணன், சந்தானம், மேலாளர் சதீஷ், கணக்காளர் மணி, மணியம் குமார், மற்றும் கோவில் பணியாளர்கள் உடன் இருந்தனர். துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பணிகள் கண்காணிக்கப்பட்டன.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்