சூளாங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாமி வீதியுலா



ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் நேற்று நடந்தது. இதையொட்டி, அன்று காலை மூலவர் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, அலங்காரமும் தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து, கிருஷ்ணர், ராதை வேடமணிந்த குழந்தைகள் கோவிலுக்கு முன் கோலாட்டமாடினர். இளைஞர்கள் உறியடித்து, வழுக்கு மரம் ஏறினர். தொடர்ந்து, இரவு அலங்கரிக்கப்பட்ட உற்சவர் கிருஷ்ணர் சுவாமி வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்