விழுப்புரம்: வாணியம்பாளையம் லக்ஷ்மி நரசிம்மர் பெருமாள் கோவிலில் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடப்பட்டது.
விழுப்புரம் அடுத்த வாணியம்பாளையம், கனகவல்லி தாயார் சமேத லக்ஷ்மி நரசிம்மர் பெருமாள் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு பூஜையுடன், கடந்த ஒரு வார காலமாக, தினசரி நாலாயிர திவ்ய பிரபந்தம், பாகவதர்களால் வாசிக்கப்பட்டது.
நேற்று காலை லக்ஷ்மி நரசிம்மர் பெருமாள் முன்பு, நாலாயிர திவ்ய பிரபந்தம், பாகவதர்களால் வாசிப்பு பூர்த்தி செய்யப்பட்டது.
இந்த விழாவில் மூலவர் லக்ஷ்மி நரசிம்மர் பெருமாள், கனகவல்லி தாயார் உடன் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உற்சவர் பெருமாளும் தாயாரும் மலர் அலங்காரத்தில் அருள் பாலித்தனர். ஏராளமான பாகவதர்களும், பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்தனர்.