ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் அருகே ராணி மங்கம்மாள் சாலை செல்லும் வழியில் வண்ணாங்குண்டு கிராமத்தில் குச்சிலியமடத்தில் மகா முனீஸ்வரர் கோயில் உள்ளது. நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரத்தின் கீழ் அலங்கார பந்தலில் நாக ஈஸ்வர பெருமானுக்கு ஆவணி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மூல வருக்கு 11 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது.
பக்தர்கள் சிவ நாம அர்ச்சனை மற்றும் பிரார்த்தனை, கூட்டு வழிபாடு செய்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைகளை ராமேஸ்வரம் சிவ முரளி குழுவினர் செய்திருந்தனர். ஏற்பாடுகளை குச்சிலியமடத்து மகா முனீஸ்வரர் கோயில் அறக்கட்டளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.