இருநாள் செம்பை சங்கீத உற்சவம் கோலாகலமாக துவங்கியது.



பாலக்காடு: பாலக்காடு அருகே, செம்பை வைத்தியநாத பாகவதரின், 130 பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, இருநாள் சங்கீத உற்சவம் இன்று கோலாகலமாக துவங்கியது.


கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், செம்பை கிராமத்தில் வைத்தியநாத பாகவதரின் உருவ சிலை முன், சங்கீத உற்சவத்தை கதகளிக்க கலைஞர் கோட்டக்கல் மது, குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். பாதிரியார் பிரான்சிஸ் தைவளப்பில் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ. சுமோத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர். செம்பை சுரேஷ், கீழத்தூர் முருகன், மிருதங்க வித்வான் குழல்மன்னம் ராமகிருஷ்ணன், காயத்ரி தம்பான், சைனுதீன், முன்னாள் குழல்மன்னம் வட்டார ஊராட்சித் தலைவர் தேவதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தொடர்ந்து கோட்டக்கல் மதுவின் கதகளி சங்கீத கச்சேரி நடந்தது. அவருக்கு வயலினில் ஜெயதேவன் ஒற்றப்பாலம், மிருதங்கத்தில் வெள்ளிநேழி ரமேஷ், கடத்தில் நாராயணன் ஆகியோர் பக்க வாத்தியம் வாசித்தனர். விழாவில், அனன்யா, அமேயா ஆகியோரின் வயலின் கச்சேரியும் ஜாஸ்மினின் இசைக்கச்சேரியும் நடந்தது. முன்னதாக, மாலை, 3:00 மணிக்கு 3:00 மணிக்கு திருபிரயார் ஸ்ரீரஞ்சனி கலாஷேத்ரா மற்றும் மஞ்சேரி சுவாதி திருநாள் குருகுல மாணவர்களின் சங்கீத ஆராதனை நடந்தது.இரண்டாம் நாளை, நாளான காலை, 11:30 மணிக்கு செம்பை வித்யா பீடத்தின், 40வது ஆண்டு மாநாட்டை, கோட்டக்கல் ஆரியவைத்திய சாலை நிர்வாக அறங்காவலர் பி.எம்.வாரியர் துவக்கி வைக்கிறார். மதியம், 12:30 மணிக்கு மண்ணுார் ராஜகுமாரனுண்ணி குழுவினரின் இசைக்கச்சேரி நடக்கிறது. இருநாள் சங்கீத ஆராதனையில், 172க்கும் மேற் பட்ட கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்