ஸ்ரீராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவில் வரும் 17ம் தேதி மஹா கும்பாபிஷேகம்



பல்லடம்: பல்லடம் தாலுகா, கணபதிபாளையம் கிராமத்தில் 120 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் வரும் 17-ம் தேதி நடைபெறுகிறது.


இதையொட்டி  (14-ம் தேதி) இரவு யாகசாலை நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. 15-ம் தேதி காலை புனித மண் எடுத்தல், புண்ணிய நதி தீர்த்தம், பக்தர்கள் முளைப்பாலிகை எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு செல்லுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், மாலை சவுடாம்பிகை அம்மனுக்கு முதலாம் கால யாகமும் நடைபெறுகிறது. 16-ம் தேதி காலை இரண்டாம் கால யாகம், கோபுர கலச ஸ்தாபனம், மதியம் தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், மாலை மூன்றாம் கால யாகம், இரவு யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தனம், அம்பாள் பிரதிஷ்டை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.


விழாவில், 17-ம் தேதி காலை 10:15 முதல் 10:45 மணிக்குள் ஹம்பி ஹேமகூட காயத்ரி பீடாதீஸ்வரர், தேவாங்கர் குல ஜெகத்குரு ஸ்ரீ தயானந்தபுரி மஹா சுவாமிகள் தலைமையில், இளம்பிள்ளை ஷண்முக சாஸ்திரிகள் சர்வ சாதகத்தில் மூலஸ்தான கோபுர விமானம், ஸ்ரீ ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து, பெண்கள் சீர் கொண்டு வருதல், மாலை ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர் – ஸ்ரீ சவுடாம்பிகை அம்மன் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. முன்னதாக காலை 8:15 மணி முதல் அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கும்பாபிஷேக திருப்பணி குழு தலைவர் சொக்கப்பன் செட்டியார் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்