ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது.
கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 11 ந்தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை,கணபதி ஹோமம்,நவக்கிரக ஹோமம் நடந்தது. தொடர்ந்து நித்ய புஷ்கரணி குளத்தில் இருந்து யானை, குதிரை, பசு, பாலிகை சூழ புனித நீர் கொண்டுவரப்பட்டு முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. 12 ந்தேதி காலை இரண்டாம் கால யாக பூஜை, திரவியாகுதி, பூர்ணாகுதி, மூன்றாம் கால யாக பூஜை, அஷடபந்தன மருந்து சாத்துதல் நடந்தது.
இன்று காலை நான்காம் கால யாக பூஜை, கோ பூஜை, பரிசாகுதி நடந்து காலை 10 மணிக்கு கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து மூலவர் அபிேஷகம் செய்து பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் தர்மகர்த்தா ராசாக்கண்ணு, நாட்டார்கள் தனபால், சேட்டு, ராசாங்கம், மாரியப்பன், விழாக்குழு தலைவர் கோதண்டபாணி,முன்னாள் வார்டு கவுன்சிலர் ஜம்புலிங்கம் உள்ளிட்ட பலர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். ரவிசுந்தர் சிவாச்சாரியார் கும்பாபிேஷகத்தை நடத்தினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.