பட்டத்தரசி அம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா



திருப்பூர்: திருப்பூர் அடுத்த சென்னிமலைப்பாளையத்தில் பட்டத்தரசியம்மன், மாகாளியம்மன் மற்றம் மதுரை வீரன் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலின் பொங்கல் பூச்சாட்டு விழா கடந்த வாரம் மஞ்சள் முடிப்பு சாமி கட்டுடன் துவங்கியது. தொடர்ந்து அம்மன் பொங்கல் வைப்பு நிகழ்ச்சி நடந்தது.

அதன்பின் புனிததீர்த்த ஊர்வலம், மாயவர் கவாலம், மதுரை வீரன் பந்தம் கட்டுதல், அம்மை அழைத்தல், தேர்இழுத்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தது.

நேற்று முன்தினம் கோவில் வீட்டுக்கு படைக்கலம் வரும் நிகழ்வும், நேற்று பொங்கல் விழா நிறைவாக மறுபூஜை மற்றும் மஞ்சள் நீராட்டும் நடைபெற்றது.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்