திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஐப்பசி அஸ்வினி அன்னாபிஷேக வழிபாடு



பகிர்க copied

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு நடந்த அன்னாபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.


உலகத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவை படைக்கும் சிவபெருமானுக்கு, ஐப்பசி மாத அஸ்வினி நட்சத்திரத்தன்று அன்னத்தால் அபிஷேகம் செய்வது வழக்கம். இறைவனை அன்னத்தால் அலங்கரித்து வழிபட்டால், செல்வமும், சுபிட்சமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதையொட்டி , திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது. இதில், 100 கிலோ அரிசியால் சாதம் வடித்து, அருணாசலேஸ்வரர் மூலவர் மற்றும் 4ம் பிரகாரத்திலுள்ள, கல்யாண சுந்தரேஸ்வரர் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடத்தப்பட்டது. இதை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். இதேபோன்று கிரிவலப்பாதையில் உள்ள திருநேர் அருணாலேஸ்வரர் கோவில், அஷ்ட லிங்கங்கள், அடி அண்ணாமலை கிராமத்தில் உள்ள ஆதி அருணாசலேஸ்வரர் கோவில் ஆகிய சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடந்தது. அருணாசலேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகத்தையொட்டி  மாலை, 3:00 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டு, பின் மாலை, 6:00 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு வழக்கம்போல் அனுமதிக்கப்பட்டனர்.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்