பிரசாதத்தை கொண்டு போக முடியல: பெருமாளே இதென்ன சோதனை



பகிர்க copied

மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் தரப்படும் பிரசாதங்களை வீட்டிற்கு கொண்டு செல்ல முடியாமல் பக்தர்கள் தவிக்கின்றனர்.

இக்கோயில் தினமும் அதிகாலை 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது. ஆனால் பிரசாத ஸ்டால் காலை 8:00 – 9:00 மணிக்குள்தான் திறக்கப்படுகிறது. பிரசாதம் வாங்க காலை 6:00 மணி முதல் பக்தர்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. ஸ்டால் திறந்து பிரசாதங்கள் தொன்னையிலும், வாழை இலையிலும் வழங்கப்படுவதால் பக்தர்கள் அதை பாதுகாப்பாக வீட்டிற்கு எடுத்துச் செல்ல முடியவில்லை.

கீழே சிந்தி சிதறி வீணாகி விடுகின்றன. இதற்கு பதில் ஸ்வீட் பாக்ஸ் வடிவலான சிறிய அட்டை பெட்டி அல்லது பேப்பர் பைகளை வழங்கினால் பாதுகாப்பாக இருக்கும். இதுகுறித்து கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா.

பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்