காரைக்குடி: குன்றக்குடியில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம் நடந்தது.
குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த நவ.10 ம் தேதி தொடங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இன்று மாலை 3:30 மணிக்கு ஆறுமுக செவ்வேல் அம்மையிடம் சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து வெள்ளி ரதத்தில் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. மாலை முக்கிய நிகழ்ச்சியான சூரசம்கார நிகழ்ச்சி நடந்தது. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் விழா நடந்தது. சூரசம்கார நிகழ்ச்சியில் குன்றக்குடி, காரைக்குடி உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை 11 மணிக்கு திரு முழுக்காட்டும், மாலையில் திருக்கல்யாணமும், இரவு 8 மணிக்கு தங்கத்தேரில் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது.