பெரியநாயக்கன்பாளையம் வனமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா



பகிர்க copied

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே செல்வபுரத்தில் உள்ள வனமாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


விழாவை ஒட்டி மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, முதல் கால யாக வேள்வி, மங்கல இசை, விநாயகர் வழிபாடு, சங்கல்பம், வாஸ்து சாந்தி, காப்பு கட்டுதல், தீபாதாரணை நடந்தது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் இரண்டாம் கால யாக வேள்வி, மண்டபார்ச்சனை, வேத பாராயணம், திருமுறை விண்ணப்பம், உபச்சார வழிபாடு நடந்தது. மூன்றாம் கால யாக வேள்வி, லலிதா சகஸ்ரநாமம், பாராயணம், 108 வகை ஹோம திரவிய சமர்ப்பணம், தீபாராதனை நடந்தது.


இன்று காலை, 5:00 மணிக்கு மங்கள இசை, திருப்பள்ளி எழுச்சி, நான்காம் கால யாக வேள்வி, சங்கல்பம் நடந்தது. தொடர்ந்து, 7:45 மணிக்கு அம்மன் விமான கோபுர கும்பாபிஷேகம், மூலஸ்தானம், வன மாரியம்மன் மற்றும் அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தசதானம், தச தரிசனம், மகா அபிஷேகம், அலங்கார பூஜை, அன்னதானம் நடந்தது. விழாவை ஒட்டி இன்று முதல் மண்டல பூஜைகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்து இருந்தனர்.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்