திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை



பகிர்க copied

காரைக்கால்: காரைக்காலில் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை நடைபெற்றது.


காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீ பிராணாம்பிகை சமேத ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் மற்றும் சனி பகவான் கோவிலில். கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு ஆலய சிவாச்சாரியார்கள் உபயமாக சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை சிறப்பாக நடைபெற்றது.தருமபுர ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் அருளாசியுடன், திருநள்ளாறு தருமபுர ஆதீனக் கட்டளை சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இதில் உலக நன்மை வேண்டியும், பக்தர்களின் துயரங்கள் நீங்கி அனைவரும் நல்வாழ்வு பெற வேண்டியும் நடைபெற்ற இவ்வழிபாட்டையொட்டி, மூலவர் ஸ்ரீ சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை செய்தனர். இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தனர்.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்