ஒரகடம் ரங்கநாதப் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை



பகிர்க copied

ஸ்ரீபெரும்புதுார்: ஒரகடம் ரங்கநாதப் பெருமாள் கோவிலில், இன்று கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது.


ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, ஒரகடத்தில் ரங்கநாதப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 10 ஆண்டுகளுக்கு முன் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நிதி வசதி இல்லாததால், பாதியில் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில், சமீபத்தில் ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கோவில் கருவறை புதுப்பித்தல், விமானங்கள் வண்ணம் தீட்டுதல், கருங்கல் தரைதளம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திருப்பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, கடந்த 13ம் தேதி யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. நேற்று விக்கிரகங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுப்பட்டு, உற்சவர் சயனாதிவாச பூஜைகள் நடைபெற்றன.


கும்பாபிஷேக நாளான இன்று காலை 7.30 மணிக்கு யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பட்டன. 8:00 மணிக்கு ரங்கநாதப் பெருமாளுக்கும், பொன்னியம்மனுக்கும் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கின. பின், கோபுர விமானக் கலசங்களின் மீது புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து, மூலவர் பெருமாளுக்கும், அம்மனுக்கும் புனித நீரால் கும்பாபிஷேகம் நடைபெற்று தீபாராதனை செய்யப்பட்டது.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்