ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் முருகன் கடவுள் சூரனை வதம் செய்து சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது.
இன்று சூரசம்ஹாரம் விழா யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் இருந்து முருகன், வள்ளி, தெய்வானை அம்மனுடன் பல்லாக்கில் புறப்பாடாகி கோயில் தெற்கு ரதவீதியில் எழுந்தருளினார். பின் அங்கிருந்த சூரனை அம்பு எய்து வதம் செய்து சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை கோயில் குருக்கள் நடத்தினர். இதன்பின் முருக கடவுளுக்கு மகா தீபாராதனை நடந்தது. பின் முருகன், வள்ளி, தெய்வானையுடன் மீண்டும் கோயிலுக்கு திரும்பினார். இதனைத்தொடர்ந்து இன்று இரவு 7 மணிக்கு ராமேஸ்வரம் திருக்கோயில் மேலவாசல் முருகன் சன்னதியில் மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.