திருக்கோஷ்டியூர் கோயிலில் ராமானுஜர் மகோற்சவம் நிறைவு | 1000th year celebrations of holy Sri Ramanuja Acharya | ராமானுஜரின் 1000வது நட்சத்திர வைபவம்

திருக்கோஷ்டியூர் கோயிலில் ராமானுஜர் மகோற்சவம் நிறைவு

மே 02,2017



திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் எம்பெருமானார் ராமானுஜர் அவதரித்த ஆயிரமாவது திருநட்சத்திர மகோற்சவம் நேற்றுடன் நிறைவடைந்தது.  இந்த மகோற்சவம் ஏப்.,22 ல் துவங்கியது. தினசரி திருக்கோஷ்டியூர் நம்பிகள் மற்றும் ராமானுஜருக்கு நவ கலச அலங்காரம், திருவீதி புறப்பாடும் நடந்தன. நேற்று காலை 7:00 மணிக்கு பெருமாள் மங்களாசனம் நடந்தது. தொடர்ந்து காலை 10:00 மணி, இரவு 8:00 மணிக்கு பெருமாள், ராமானுஜர் புறப்பாடு நடந்தது. அதேபோல் சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோயிலில் திருநட்சத்திர மகோற்சவம் நடந்தது. கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் பங்கேற்றனர்.

ஆண்டாளுக்கும் ரங்கமன்னாருக்கு தாய்வீட்டு சீதனம்!

மேலும்