மே 04,2017
காஞ்சிபுரம் : ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு அவதார விழா, நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், பூந்தமல்லி ஆகாசமூர்த்தி கோவிலில் இருந்து பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் ராமானுஜர் உற்சவர் சிலை, ஊர்வலமாக நேற்று காஞ்சிபுரம் வந்தது. பூந்தமல்லியில் அமைந்துள்ள ஆகாசமூர்த்தி கோவிலில் இருந்து பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியர் மற்றும் ராமானுஜரின் உற்சவர் சிலைகள் வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. இந்த ஊர்வலம், தமிழகத்தில் முக்கிய நகரங்கள் வழியாக சென்று, கன்னியாகுமரியில் நிறைவு பெறுகிறது. அந்த ஊர்வலம் நேற்று முன்தினம் காஞ்சிபுரம் வந்தது. நகரில் முக்கிய இடங்களில் மக்கள் வழிபாட்டிற்காக நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து வேலுார், கிருஷ்ணகிரி, ஏலகிரி, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்கள் வழியாக கன்னியாகுமரியை சென்றடையும் என, ஊர்வலத்தில் கலந்து கொண்ட நிர்வாகி ஒருவர் கூறினார்.