சபரிமலைக்கு இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்

நவம்பர் 15,2019



சென்னை : சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெற உள்ள, மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக, தமிழகத்திலிருந்து, அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கேரள மாநிலத்தில் உள்ள, சபரிமலை அய்யப்பன் கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும், மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில், அய்யப்பனை தரிசிக்க, தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் செல்வது வழக்கம்.இந்த ஆண்டு, கார்த்திகை முதல் தேதியான, வரும், 17ல் இருந்து மண்டல கால பூஜை நடைபெற உள்ளது. அதன்பின், டிசம்பர், 30 முதல், 2020 ஜனவரி, 20வரை, மகரவிளக்கு கால பூஜை நடைபெறும்.

இதனால், தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, இன்று முதல் அடுத்த ஆண்டு, ஜனவரி, 20ம் தேதி வரை, தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், அதிநவீன சொகுசு மிதவை பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து, 55; திருச்சி, மதுரை, புதுச்சேரியில் இருந்து, தலா, 2; தென்காசியில் இருந்து, 3 பஸ்கள் என, தினமும், 64 பஸ்கள் இயக்கப்படுகின்றன. பயணியரின் தேவைக்கேற்ப, பஸ்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், அரசு விரைவு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. மேலும், www.tnstc.in www.redbus.in www.busindia.com www.paytm.com www.makemytrip.com மற்றும், www.goibgo.com ஆகிய இணையதளங்களிலும், டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பயணிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு, 94450 14412, 94450 14450, 94450 14424, 94450 14463 என்ற, மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்