சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் காமன் கூத்து திருவிழா கொண்டாடப்பட்டது.
இங்குள்ள மங்கைபாகர் தேனம்மை கோயிலை ஒட்டி ரதி மன்மதனுக்கு தனியாக கோவில் உள்ளது. இக்கோயிலில் மார்ச் 5ஆம் தேதி காமன் கூத்து திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. ஆலைக் கரும்பு, பேய்க்கரும்பு, ஆமணக்கு இலை, தர்ப்பைப்புல், வைக்கோல் கொண்டு காமன் நடவு நடந்தது. 15 நாட்கள் ரதி மன்மதன் வேடமிட்ட ஆண்கள் கிராமங்களுக்குச் சென்று ரதி மன்மதன் வரலாறை பாட்டாக பாடி ஆடி எடுத்துக் கூறினர். மார்ச் 19ம் தேதி இரவு காமன் திருவிழா நடந்தது. அன்றைய தினம் மன்மதனை சிவன் நெற்றிக்கண்ணால் எரித்து அழிக்கும் காமன் தகனம் நடந்தது. மார்ச் 20 ம் தேதி மன்மதனை உயிர் எழுப்பும் விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.