திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி- தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா மார்ச் 26ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது.விழாவில் நேற்று (ஏப்.7) இரவு 7.45 மணியளவில் பட்டாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து இன்று ஏப்.8ல் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் முன்னிலையில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நாளை ஏப்.9ம் தேதி காலை 6 மணியளவில் கிரிவல வீதியில் தேரோட்டம் நடைபெறுகிறது. ஏப்.10-ம் தேதி தீர்த்தவாரி பூஜையுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.