சிவனாக காட்சியளித்த சாஸ்தா; வேத பாராயணத்துடன் வழிபாடு

டிசம்பர் 08,2023சிவனடியார்களின் வரலாற்றை சொல்லும் நுால் பெரியபுராணம். இந்நுால் உருவாக காரணம் நாயன்மார்களின் ஒருவரான சுந்தர மூர்த்தி சுவாமிகள். இவர், ஒரு சமயம் விழுப்புரத்தின் அருகே இருக்கும் திருவாமத்துாரில் கோயில் கொண்டிருக்கும் அபிராமேஸ்வரராகி சிவபெருமானை தரிசிக்க வந்தார். கோயில் வாசலில் சிவகணம் ஒன்று தடுத்து நிறுத்தி தற்போது சுவாமி இங்கு இல்லை, கிழக்கு திசையில் சென்றார் எனக்கூறியது. அவரும் அங்கு செல்ல அங்கிருந்த மண்டபத்தில் சாஸ்தாவின் வடிவத்தில் காட்சி கொடுத்து எல்லா இடத்திலும் இருப்பது நாமே என்று அருள் செய்தார் அபிராமேஸ்வரர். அந்த இடத்தில் எழுப்பப்பட்ட கோயில் இது. ஆயிரம் ஆண்டு பழமையானது. இதனை அய்யூர் அகரம் அய்யங்கோயில் என்பர். யானை வாகனத்தில் கையில் சாட்டை ஏந்தியபடி கம்பீரமாக காட்சி தருகிறார் அபிராமேஸ்வரர் சாஸ்தா. இவரிடம் வைக்கும் வேண்டுதல் யாவும் பலிக்கும். முக்கிய நாட்களில் வேதபாராயணத்துடன் வழிபாடு நடக்கும். இவ்வூர் ஆஸ்தீக சமாஜத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

முண்டியம்பாக்கம் சாலையில் இருந்து 3 கி.மீ.,
நேரம்: காலை 10:00 - 12:00 மணி மாலை 5:00 - 7:00 மணி
தொடர்புக்கு: 98423 40514, 95009 08497

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்