தினமும் ஒரு சாஸ்தா – 10; திருமணம் கைகூட... மணக்கரை சாஸ்தா



துாத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் மணக்கரையில் பூர்ணா புஷ்கலாவுடன் காட்சி தருகிறார் புங்கமுடையார் சாஸ்தா. இவரை வணங்கினால் திருமணம் கைகூடும். வல்லநாடு மெயின் ரோட்டில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் தாமிரபரணி நதிக்கரையில் உள்ளது கோயில். இங்கு விநாயகர், முருகனும் உள்ளனர். வளாகத்தில் விஷ்ணுவின் அம்சமாக 25 அடி உயரத்தில் பிரமாண்ட பூதத்தார் சாஸ்தா இருக்கிறார். 11 வாரங்கள் தொடர்ந்து புங்கமுடையார் சாஸ்தாவை வழிபட்டால் திருமணம் நடக்கும். அமாவாசை, பவுர்ணமி, மார்கழியில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. பிரகாரத்தில் கருப்பசாமி, சுடலை மாடசாமி, வீரபுத்திரர், பட்டவராயர் ஆகிய காவல் தெய்வங்கள் உள்ளனர். 


எப்படி செல்வது; ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 6 கி.மீ.,  


நேரம்; காலை 10:30 – 3:30 மணி 


தொடர்புக்கு; 94432 31465, 99449 91944, 94865 91085


அருகிலுள்ள தலம் ; வல்லநாடு திருமூலநாதர் கோயில் 10 கி.மீ.,


நேரம் ; காலை 7:00 – 12:00 மணி– மாலை 5:00 – 8:00 மணி 


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்