தினமும் ஒரு சாஸ்தா – 13; தம்பதி ஒற்றுமைக்கு... காஞ்சிபுரம் தர்மசாஸ்தா!



காஞ்சிபுரம் மாவட்டம் நெல்லுக்காரத் தெருவில் உள்ளது கச்சபேஸ்வரர் கோயில். இங்கு அருள்புரியும் தர்மசாஸ்தாவை வழிபட்டால் தம்பதி ஒற்றுமை உண்டாகும்.  


தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்த போது, மத்தாக பயன்பட்ட மந்திர மலை கடலில் அழுந்த துவங்கியது. இதனால் திருமால் கச்சப (ஆமை) வடிவமெடுத்து, இத்தல சிவபெருமானை வேண்டி மலையை தாங்கும் சக்தியை பெற்றார். இதனால் சிவபெருமானுக்கு கச்சபேஸ்வரர் என்ற பெயர் உண்டானது. அப்போது சிவனருளைப் பெற விநாயகர், துர்கை, சூரியன், பைரவர், தர்மசாஸ்தா வழிபட்டு பலன் பெற்றனர். இங்கு பூர்ணா, புஷ்கலாவுடன் தர்ம சாஸ்தா சன்னதி உள்ளது. உத்திர நட்சத்திரத்தன்று இவருக்கு அர்ச்சனை செய்தால் விருப்பம் நிறைவேறும். 


எப்படி செல்வது: காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., 


நேரம்: காலை 7:00 – 12:00 மணி, மாலை 5:00 – 8:00 மணி 


தொடர்புக்கு: 044 – 2733 3840


அருகிலுள்ள தலம்: காஞ்சிபுரம் சத்யநாதர் கோயில் 0.5 கி.மீ., 


நேரம்: காலை 7:00 – 1:00 மணி, மாலை 4:00 – 7:00 மணி


தொடர்புக்கு: 044 – 2723 2327


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்