விழுப்புரம் மாவட்டம் காகுப்பம் பகுதியில் பூரணி பொற்கலை சமேத ஹரிஹர புத்திர ஐயனாரப்பரை தரிசனம் செய்ய வாருங்கள். கடன் பிரச்சனை தீரும்.
நானுாறு ஆண்டுகளுக்கு முன்பு குதிரை, நாய் இரண்டும் இவ்வூரினை எந்நேரமும் பாதுகாத்து வந்துள்ளது. பின்னர் படிப்படியாக இக்கோயில் வளர்ச்சி பெற்றுள்ளது.
இங்கு தை மாதத்தில் வரும் தைப்பூசம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இப்பகுதியில் உள்ள விநாயகர் கோயிலில் இருந்து உற்சவர், ஐயனாரப்பர் கோயிலுக்கு எடுத்துவரப்பட்டு பூஜைகள் நடக்கும்.
இங்கு வாரத்தில் ஞாயிறு, திங்கள், புதன் கிழமைகளில் பொங்கல் வைப்பது, அன்னதானம் போன்ற வேண்டுதல்களை பக்தர்கள் நிறைவேற்றுகின்றனர்.
இவரால் குழந்தை இல்லாதோருக்கு குழந்தை பாக்கியமும், குடும்ப கஷ்டமும், கடன் பிரச்னையும் தீரும்.
எப்படி செல்வது; கடலுாரில் இருந்து 43 கி.மீ.,
நேரம் : காலை 6:00 – 8:00 மணி. மாலை 5:00 – 7:00 மணி
தொடர்புக்கு : 96559 38476
அருகிலுள்ள தலம்: திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோயில் 18 கி.மீ.,
நேரம்: காலை 6:30 – 12:00 மணி, மாலை 4:00 – 8:30 மணி
தொடர்புக்கு: 94862 79990