சபரிமலை பம்பையில் தர்ப்பணம் நடத்த விரிவான வசதி

டிசம்பர் 11,2024



சபரிமலை; தசரதனுக்கு ஸ்ரீராமன் பலி தர்ப்பணம் கொடுத்த பம்பையில் பக்தர்கள் தர்ப்பணம் நடத்துவதற்காக விரிவான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.


சபரிமலை வரும் பக்தர்கள் பம்பை நதியில் குளித்துவிட்டு தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இதற்காக பம்பை நதிக்கரையில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு விரிவான ஏற்பாடு செய்துள்ளது. பம்பை மணல் பரப்பில் தனியாக பந்தல் அமைத்து 19 புரோகிதர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேவசம்போர்டு ஏலம் நடத்தி குத்தகை அடிப்படையில் இவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்துள்ளது. பக்தர்கள் கொடுக்கும் காணிக்கை இவர்களது வருமானம் ஆகும். ஸ்ரீராமன் வனவாசம் கொண்டிருந்தபோது தனது தந்தை தசரதன் இறந்த செய்தி அறிந்து பம்பை மணல் பரப்புக்கு வந்த அவரும் தம்பி லட்சுமணனும் இங்கே பலி தர்ப்பணம் நடத்தியதாகவும் அதன் நினைவாகவே இங்கு தர்ப்பணம் நடைபெறுவதாகவும் வரலாறு கூறுகிறது.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்