திருவண்ணாமலை; கார்த்திகை மாதத்தை யொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். கொளுத்தும் வெயிலையும் பொறுப்பெடுத்தாமல் நீண்ட வரிசையில் பல மணி நேரமாக காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அம்மணி அம்மன் கோபுரம் பகுதியில் முறையான கார் பார்க்கிங் வசதி இல்லாததால் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கி தவித்தன. இன்று அம்மணி அம்மன் கோபுரம் நுழைவாயில் முன் வி.ஐ.பி.,க்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.