சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள்; ஒரே நாளில் 1.06 லட்சம் பக்தர்கள் தரிசனம்

டிசம்பர் 24,2024



திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று (டிச.,23) ஒரே நாளில் 1.06 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 


சபரிமலையில் நவம்பர் 16ம் தேதி மண்டல பூஜை யாத்திரை துவங்கியது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 41 நாட்கள் நிறைவாக டிச.26ம் தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது. மண்டல பூஜைக்கான நாள் நெருங்கி வரும் நிலையில், நாள்தோறும் வரும் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மண்டல பூஜையை முன்னிட்டு நேற்று (டிச.,23) 1,06,621 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 22,769 பேர் ஸ்பாட் புக்கிங் மூலமும், 5,175 பேர் புல்மேடு வழியாகவும் வந்து தரிசனம் செய்துள்ளனர். தொடர்ந்து கூட்டம் அதிகரித்து வருவதால் முன்பதிவுக்கான எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வித வசதிகளும் செய்யப்பட்டு வருவதாகவும், போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும் கோவில் நிர்வாகம் கூறி உள்ளது. நவ.,16ம் தேதி முதல், கடந்த 38 நாட்களில் 30.78 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்தாண்டு இதே பூஜை காலத்தில் 26.41 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்