அன்னுார் மன்னீஸ்வரர் தேர் திருவிழாவில் அசத்திய திருக்குறள் கும்மி ஆட்டம்



அன்னுார்; அன்னுார் மன்னீஸ்வரர் தேர்த் திருவிழாவில் திருக்குறள் கும்மியாட்டம் நடந்தது. அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில் 25ம் ஆண்டு தேர்த் திருவிழா கடந்த 3ம் தேதி கிராம தேவதை வழிபாடுடன் துவங்கியது. கடந்த 6ம் தேதி இரவு 7:00 மணிக்கு அருந்தவச் செல்வி உடனமர் மன்னீஸ்வரர், பூத வாகனத்தில், தேரோடும் வீதி வழியாக சென்று கோவிலை அடைந்தது. இரவு பல்லடம் ஆசிரியர் பழனிச்சாமி வள்ளி முருகன் கலைக்குழுவின், திருக்குறள் கும்மியாட்டம் நடந்தது. ஆறு வயது சிறுவர், சிறுமி முதல் 60 வயது மூதாட்டி வரை 250 பேர் கும்மியாட்டத்தில் பங்கேற்றனர். திருக்குறள் மற்றும் கும்மி பாடல்களுக்கு ஏற்ப கைகளை மேலும் கீழும் உயர்த்தி தாழ்த்தி நளினமாக 2 மணி நேரம் ஆடினர். இதையடுத்து கம்பத்தாட்டம் நடந்தது. ஆசிரியர்களை, அறங்காவலர் குழு தலைவர் நடராஜன், அறங்காவலர்கள் மணி, யசோதா, சங்கரன் ஆகியோர் கவுரவித்தனர். நாளை காலை 10:30 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேக பூஜையும், இரவு 7:30 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலாவும் நடக்கிறது. நாளை மறுநாள் காலை 11:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும், 7:30 மணிக்கு பவளக்கொடி கும்மி நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும் 10ம் தேதி காலை 10:00 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்