நத்தம் கால பைரவர் கோவில்களில் வளர்பிறை அஷ்டமி வழிபாடு



நத்தம்; நத்தம் அருகே குட்டூர் உண்ணாமுலை அம்பாள் உடனுறை அண்ணாமலையார் கோவில் காலபைரவர் கோவிலில் வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு பால், பழம், இளநீர், சந்தனம், திருமஞ்சனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது.இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து விளக்கேற்றி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது. இதைப்போலவே கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் கால பைரவர் சன்னதியில் வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இங்கும் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்